About Maniyettan


கேரளாவில் கொங்கன்படை என்ற கலாச்சார விழாவுக்கு பெயர்போன சிற்றூர் என்ற அழகிய ஊருக்கு உட்பட்டதுதான் விளையோடி கிராமம். இங்கே உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வாக்குக்கு இணங்க ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மணியேட்டன் ஒரு இயற்கை விவசாயி.

சிறு வயதில் தமிழும் மலையாளமும் பள்ளியில் கற்றுக்கொண்டிருக்கும் போதே , நாடகங்களில் பல வேடங்கள் புனைந்து நடித்து தனது கலையுணர்வை ஊட்டி வளர்த்த மணியேட்டன் இயற்கையில் ஒரு கலைஞர்.
நாடகங்களில் நடிக்கும்போதே அரிய பல யோகாசன நிலைகளை ஆராய்ந்து கற்று அவற்றை செய்து காட்டிய மணியேட்டன்,  யோகேஸ்வரதாஸ் என்ற பட்டமும் பெற்ற ஒரு யோகி.
ஒரு சர்க்கரை தொழிற்சாலையில் பணியாற்றி சகப்பணியாளர்களின் மதிப்பை பெற்றவராக, விவசாயிகளை ஊக்கப்படுத்துபவராக ஒய்வு பெறும் வரை ஓயாமல் ஓடி உழைத்த மணியேட்டன் உண்மையில் ஒரு கர்ம யோகி.
தன்னால் இயன்றவரை ஏழைகளுக்கு உதவி, சிறுவர் சிறுமிகளுக்கு கல்வி அளித்து வரும் மணியேட்டன் ஒரு சமூக சேவகர் என்றால் அது மிகையாகாது.
சத்குரு யோகாச்ரமம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக நூற்றுக்கணக்கான புண்ணிய ஆத்மாக்களுக்கு இலவசமாக யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியான முறைகளை கற்றுக்கொடுத்தும், நாற்பது வருடங்களாக சத்சங்கம் மூலமாக ஞான கருத்துக்களை பொது மக்களுக்கு போதித்தும் வரும் ஒரு சத்குரு தான் மணியேட்டன்.
எல்லா ஜீவராசிகளிலும் இறைவனை கண்டு, தனக்குள்ளும் தானே அறிந்து, தன்னிடம் வந்து சேரும் உயிர்களிடம் கருணையாலும் ஞானத்தாலும் உபதேசித்து உயர்த்துகின்ற மணியேட்டன் உண்மையில் ஒரு ஆத்ம ஞானி!

Post a Comment

2 Comments

  1. *சத்குரு மணி ஏட்டன்* அவர்களின் உண்மை நிலையை விளக்கும் அருமையான அறிமுகம் நன்றிங்க நண்பரே 🙏🙏🙏

    ReplyDelete